மறுதலித்தல்
ஒரு
நாள்
இரு
நாளல்ல
பல
நாள் – கொடும்
பசியுடன்
உன்
வாசல் வந்தேன்.
அறுசுவை
உணவிருந்தும்
கதவடைத்து
சென்றாய்.
எது
பசி
எது
உணவு
எது
அமுது
என்
பசி
என்
உணவு
என்
அமுது
எதுவென
நான் உணர்ந்த பொழுது
பின்னொரு
இரவில்
மிச்சமிருந்த
உணவுண்ண
எனை
அழைத்தாய்.
இனி
உன் வாசல்
கடக்கையில்
என்
கண்கள் குருடாகும்
உன்
குரல் கேட்கையில்
செவிகள்
திறனற்றுப் போகும்.
என்
பசி உன் பசியாகட்டும்
எனக்கானதையும்
நீயே
சேர்த்துப் புசி.

